
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக உட்பட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு கொழும்பு- ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக பணியாற்றிய திலும் துசித்த குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிரான வழக்கே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கை நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபரால் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிரான தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரம் கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
இவர்களுக்கு எதிராக போலி சாட்சியங்கள் உருவாக்குதல் மற்றும் சாட்சியங்களை மறைத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.