தமது ஊழியர்கள் நாளை பணி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதில்லை என்று இலங்கை மின்சார சபை ஐக்கிய தொழிற்சங்க ஒன்றியத்தின் அமைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
தாம் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஆரம்பத்தில் இலங்கை மின்சார சபை ஐக்கிய தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்திருந்தது.
எனினும், நாளை குறித்த பணி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதில்லை என்றும் பணி பகிஷ்கரிப்புக்கான புதிய திகதி தீர்மானிக்கப்படும் என்றும் ரஞ்சன் ஜயலால் அறிவித்துள்ளார்.
யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்வதற்கு குறித்த தொழிற்சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
மின் நிலையங்களில் கடமையாற்றும் அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் அவசர பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களை தமது தொழிற்சங்கம் பணி பகிஷ்கரிப்புக்கு அழைக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
மின் நிலையங்களில் தமது வரவு இன்றி நிலையாக மின்சாரத்தை விநியோகிக்க முடியாது என்று மின்சார சபை தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.