
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கடற்படையினருக்காக காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை நகுலேஷ்வரம், ஜே/226 கிராம சேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கையை நில அளவை திணைக்களம் இன்று முன்னெடுத்திருந்தது.
இதன்போது அங்கு ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இவ்வேளையில் காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு செல்வதாக கூறிவிட்டு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அவ்விடத்தில் இருந்து சென்றனர்.