May 4, 2025 20:37:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய பிரதமர் மோடி – இலங்கை ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு

ஸ்கொட்லாந்தின் – க்ளாஸ்கோ நகரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நட்பு ரீதியில் சந்தித்து பேசியுள்ளார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு க்ளாஸ்கோ நகரில் இடம்பெறுகின்றது.இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அரச தலைவர்களை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நட்பு ரீதியாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியுள்ளார்.இது குறித்த புகைப்படங்களை நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.