
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்ட 702 இலங்கையர்களின் தொலைபேசி இலக்கங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கும் போதே, பயங்கரவாத தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு மூலம் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் மூலமே இலங்கைக்கு இதுதொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
குறித்த சந்தேகநபரின் தொலைபேசியில் 702 இலங்கையர்களின் தொலைபேசி இலக்கங்கள் இருந்ததாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் கைது செய்யப்பட்ட எஸ். சம்சுதீனின் தொலைபேசியில் இருந்த ‘முஜாஹிதீன் போ அல்லாஹ்’ எனும் வாட்ஸ்அப் குழு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் உட்பட ஐஎஸ் அமைப்பின் செயற்பாடுகள் குறித்த வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு நீதிமன்றத்துக்கு விளக்கம் அளித்துள்ளது.