July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் தொடர்பாக பிரிட்டிஷ் தூதரகத்தின் அறிவித்தல்

பிரிட்டனுக்குள் நுழைவதற்கு இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் பிரிட்டனுக்கு வருவதாயின் குறைந்த பட்சம் 14 நாட்களுக்கு முன்னர் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரியவருகிறது.

அங்கீகாரம் பெற்ற பொது மருத்துவ நிறுவனம் தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஒக்போர்ட் அஸ்ட்ரா செனிகா, அஸ்ட்ரா செனிகா கொவிஷீல்ட் பைசர் பயோன்டெக், மொடர்னா, அஸ்ட்ரா செனிகா வெக்ஸ்செவ்ரியா, மொடர்னா டேக்டா மற்றும் ஜேன்ஸ்சென் ஆகிய தடுப்பூசிகள் பெற்ற நிலையில் பிரிட்டனுக்குப் பயணிக்கலாம்.

“முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இலங்கை சுற்றுலா பயணிகள், பிரித்தானியாவிற்கு வருகை தருவதற்கு முன்னர், 48 மணித்தியாலத்திற்குள் பயணிகளுக்கான படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுடன், இரண்டாவது நாள் முடிவடைவதற்கு முன்னர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணமும் செலுத்தியிருத்தல் அவசியமாகும்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாத பயணிகள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும்.

வேறொரு நாட்டிலிருந்து பிரிட்டனுக்கு பயணிப்பவர்கள், பிரிட்டனைச் சென்றடைந்தவுடன் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்”

போன்ற வழிகாட்டல்களையும் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.