இலங்கை சந்தையில் சமீப காலமாக அதிகரித்து வந்த வாகனங்களின் விலை, தற்போது ஓரளவு குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் வாகன உதிரிபாகங்களின் விலைகள் கட்டுப்பாடற்ற வகையில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சில வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அநியாயமான முறையில் உதிரிபாகங்களின் விலையை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டொலரின் பெறுமதி மற்றும் சந்தை நிலவரங்கள் காரணமாக வாகன உதிரிபாகங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சந்தையில் வாகனங்களின் விலைகள் ஸ்திரமாகியுள்ளமை சாதகமான முன்னேற்றம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.