பிரிட்டன் முதலீடுகளை மேற்கொள்வதற்கு இலங்கையைவிடச் சிறந்த நாடொன்று இல்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வெளியுறவு அமைச்சர், அங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையே வர்த்தக உறவுகள் பலப்படுத்தப்பட்டு, வளர்க்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரெக்ஸிட்டைத் தொடர்ந்து பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய சந்தைகள் மற்றும் நாடுகளைக் கண்டறியும் முயற்சியில் பிரிட்டன் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
பிரிட்டனின் விழுமியங்கள், மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் இலங்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் பிரிட்டிஷ் தொழில்முனைவோர்கள் இலங்கையில் ‘வசதியாக’ இருப்பார்கள் என்று ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.