வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் சுகாதார துறையினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் பணி திங்கட்கிழமை (01) ஆரம்பிக்கப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
மூன்றாவது டோஸாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள போதனா மருத்துவனை, மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆதார மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி வழங்கும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.
மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு முதல் கட்டமாக மூன்றாது டோஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
அடுத்த கட்டமாக ஏனைய துறையினருக்கும் பொது மக்களுக்கும் வழங்கப்படவுள்ளன.