June 12, 2025 22:26:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட மாகாண ஆளுநர் – அங்கஜன் இராமநாதன் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (31) இடம்பெற்றது.

இச்சந்திப்பில், புதிய ஆளுநருக்கு அங்கஜன் இராமநாதன் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், வடக்கில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியுள்ளார்கள்.