June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டவிரோதமான முறையில் மருந்துகளை வழங்கிய வைத்தியர் கைது!

பாணந்துறை, பள்ளியமுல்ல பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் அபியோயிட் மருந்துகளை வழங்கிய குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 50 வயதுடைய பாணந்துறை, கொரக்காபொல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

மருந்து சீட்டுகள் இன்றி தனிநபர்களுக்கு சட்டவிரோதமான முறையில் அபியோயிட் மருந்துகளை வழங்கியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.