இலங்கை – பிரான்ஸ் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் 2015 ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் 6 வருடங்களின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் அந்த விமான சேவையை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் விமான நிலையம் நோக்கி பயணமாகும் என்பதுடன், அதே நாளில் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு மற்றொரு ஸ்ரீலங்கன் விமானம் புறப்பபடும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.