January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். அரசாங்க அதிபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டார்

சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இன்றையதினம் பார்வையிட்டுள்ளார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான காலநிலை நீடித்துவரும் நிலையில், யாழ். மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கல்லுண்டாய், நாவாந்துறை, அச்சுவேலி போன்ற பகுதிகளில் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அந்த இடங்களுக்கு சென்ற அரசாங்க அதிபர், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

This slideshow requires JavaScript.