கவிஞர் பல்துறை கலைஞர் அபிநய நாயகர் என்.எம். அலிக்கான் எழுதிய ‘நெஞ்சில் பூத்த நெருப்பு’ கவிதை நூல் வெளியீட்டு விழா சாய்ந்தமருது – மாளிகைக்காடு தனியார் விடுதியில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக கிறாஆத் தேசிய கீதத்தை தொடர்ந்து கொரோனாவில் உயிரிழந்தவர்கள், கொரோனா பணியில் களப்பணியாற்றிய போது உயிர்நீத்த வைத்தியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் அனைவரையும் நினைவு கூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலி இடம்பெற்றது.
இதனையடுத்து வரவேற்புரையினை அல்- மீசான் பவுன்ஷன், ஸ்ரீலங்காவின் நிகழ்ச்சி திட்டப்பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். ஸஹிர் மேற்கொண்டதுடன், தலைமையுரையினை அல்- மீசான் பௌண்டேஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான, சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் நூருல் ஹுதா உமர் உரையாற்றினார்.
குறித்த நூலின் ஆய்வுரையை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவரும், பிரபல இலக்கிய செயற்பாட்டாளருமான, கவிஞர், ஆசிரியர் ஜெஸ்மி மூஸா மேற்கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்புரையினை பிரபல ஆசிரியர் றிசாத் செரீப்பும் அல்- மீசான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஆலோசனை சபை தவிசாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழில்நுட்ப பேரவையின் தவிசாளருமான இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான கலாநிதி அன்வர் எம்.முஸ்தபாவும் அஹமட் அலி வைத்தியசாலையின் முதல்வர், பிரபல சமூக சேவகர் எம்.எம். இஸ்ஸதீன் நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் முஸ்லிம் விவகார தேசிய இணைப்பாளரும், பிரபல அரசியல் சமூக செயற்பாட்டாளருமான சிராஸ் ஜுனூஸ் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளராக இருந்த இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் கௌரவ உறுப்பினர், ஓய்வு பெற்ற சிரேஷ்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பிரபல பாடகர் டைட்டானிக் இசைக்குழுவின் பிரதானி எம்.எச். றியாஸ்கானின் இசைத்தட்டு அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது.