தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம 12.3 ஆம் கட்டைக்கு அருகில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் 1969 அம்பியுலன்ஸ் வாகனம் ஒன்று உட்பட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களுள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கான்ஸ்ட்பிள் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.