May 28, 2025 20:31:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன: சுற்றுலாப் பயணங்களை தவிர்க்குமாறு அறிவித்தல்!

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையே அமுலில் இருந்து பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன், மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் முற்றாக நீங்காத காரணத்தினால் மக்கள் சுகாதார ஒழுங்குவிதிகளை பேணி நடந்துகொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறிப்பாக பொதுப் போக்குவரத்துகளை பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை அத்தியாவசிய காரணம் இன்றி வெளியில் பயணங்களை மேற்கொள்வதையும், சுற்றுலாப் பயணங்கள் செல்வதனையும் தவிர்த்துக்கொள்ளுமாறும், அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.