May 14, 2025 9:06:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் பழிவாங்கல்களை ஆராயும் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கான காலம் நீடிக்கப்பட்டது

அரசியல் பழிவாங்கல்களை ஆராயும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகளை முன்வைப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழு பரிந்துரைகளை முன்வைப்பதற்கான காலம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்ற நீதியரசர் தம்மிக பிரியன்த தலைமையில் இயங்கி வரும் இந்த ஆணைக்குழு, இவ்வருடம் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான பொறிமுறைகளை ஆராய்ந்து வருகிறது.