‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதை அறிந்து தாம் அதிர்ச்சியடைந்ததாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் தெரிவித்துள்ளார்.
குறித்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத நிந்தனைகளில் ஈடுபட்டு முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்திக்கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய ஒருவர் பொறுப்பான ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு தாம் கவலையும் அதிருப்தியும் அடைவதாக அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் தெரிவித்துள்ளார்.
குறித்த நியமனத்தின் மூலம் முஸ்லிம்கள் பல வழிகளில் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சுட்டிக்காட்டியுள்ளது.
ஞானசார தேரரின் நியமனம் சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அகௌரவத்தைக் கொண்டுவரும் ஒரு விடயமாகும் என்று குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.