தமிழ் அரசியல் கைதி ஒருவரின் மகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தந்தையின் விடுதலையை வலியுறுத்தியே, புலம்பெயர்ந்து வாழும் சிறுமி கம்ஷா சதீஷ்குமார் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த சிறுமியும் தாயும் இப்போது புலம்பெயர்ந்து பிரான்ஸில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
சிறுவர் தினத்தில் சிறுவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும், தனது தந்தை விடுதலையாக வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் கம்ஷா குறிப்பிட்டுள்ளார்.
சிறுமி கம்ஷாவின் முழுமையான கடிதம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.