January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹக்கீமும் ரிஷாத்தும் இரட்டை வேடம் போடக்கூடாது; சுமந்திரன் வலியுறுத்து

20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை இடைநிறுத்துவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி எடுத்துள்ள முடிவு வரவேற்கக்கூடியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல்,தமிழ் முற்போக்கு கூட்டணி எடுத்த முடிவை போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு இல்லாவிட்டால் ஹக்கீமும் ரிஷாத்தும் இரட்டை வேடம் போடுகின்றனரா என்ற சந்தேகம் எழும். அதேபோல் இணைந்து பயணிப்பதிலும் சிக்கல் உருவாகும் என்று சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.