May 13, 2025 11:13:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீனாவின் தடை குறித்து பார்க்கவும்’: வங்கிசார் தொழிற்சங்கம் நிதி அமைச்சரிடம் வேண்டுகோள்

சீன உரக் கொள்வனவில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்துமாறு வங்கிசார் தொழிற்சங்கம் நிதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளது.

சீனாவின் உர நிறுவனத்துக்கான கடன் செலுத்தப்படாவிட்டால், ஆரோக்கியமற்ற நிலை ஏற்படலாம் என்று இலங்கை வங்கி ஊழியர்கள் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்ந்தால், பொது மக்களிடையே மக்கள் வங்கியின் நம்பிக்கை பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமற்ற தகவல்கள் பரிமாறப்படுவதை நிறுத்துவதில் நிதி அமைச்சர் தலையிட வேண்டும் என்று தொழிற்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

சீன நிறுவனத்துக்கு பணத்தை வழங்காதது மக்கள் வங்கியின் தவறில்லை என்றும் நீதிமன்ற தடையுத்தரவு இருப்பதாகவும் வங்கிசார் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.