May 14, 2025 23:29:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டின் பல்வேறு சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி

நாட்டின் பல்வேறு சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது மக்கள் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபை, புகையிரத சேவை, மத்திய வங்கி உட்பட பல்வேறு சேவைகளும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தொழிற்சங்க நடவடிக்கைகள். பணி பகிஷ்கரிப்புகளால் குறித்த சேவைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ள முழுமையான விடயங்களை இணைப்பில் காணலாம்.