May 25, 2025 2:53:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய அரசியலமைப்பு, மீனவர் பிரச்சினை: சம்பந்தனுடன் இந்தியத் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் தூதரகத்தின் முதலாவது செயலாளர் பானு பிரகாஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

சம்பந்தனுக்குத் தங்களுடைய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்தியத் தூதுவர், பல முக்கிய விடயங்கள் குறித்து சம்பந்தனுடன் உரையாடியுள்ளார்.

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு, இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் இந்திய முதலீடுகள், உதவித் திட்டங்கள் பற்றியும் இதன்போது பேசப்பட்டுள்ளன.

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவோடு இந்தியத் தூதுவர் சந்திப்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.