July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 2 மில்லியன் யூரோ நிதி உதவி!

கொவிட் தொற்று நோயை நிர்வகிப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் மேலும் 2 மில்லியன் யூரோ நிதி உதவியை ஐரோப்பிய ஒன்றியம் (EU) வழங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான அலுவலகமான ECHO வழங்கும் இந்த மானியம், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் இலங்கையில் உள்ள World Vision நிறுவனங்களின் ஊடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றின் பின்னர் இலங்கையில் சமூகப் பொருளாதார விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை இந்த நிதி உதவி நிறைவு செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் சுகாதார துறைக்கு 2 மில்லியன் யூரோ மற்றும் சுற்றுலாத் துறை அபிவிருத்திக்கு 4 மில்லியன் யூரோ நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

“இந்த புதிய உதவித் தொகையானது கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய பிரதிபலிப்பின் ஒரு பகுதியாகும்” என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவின் தூதுவர் டெனிஸ் சாய்பி கூறியுள்ளார்.

“இலங்கையின் கொவிட் தொற்றிலிருந்து மீண்டு வரும் முயற்சிக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பை உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டுவதாக இலங்கைக்கான அதன் பிரதிநிதி டாக்டர் அலகா சிங் தெரிவித்துள்ளார்.