February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அமெரிக்காவுக்கு விற்காதே”: யாழ். மின்சார சபைக்கு முன்னால் கையெழுத்துப் போராட்டம்

கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானித்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தை அமெரிக்காவுக்கு விற்காதே என்ற கோரிக்கையை முன்வைத்து இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களினால் நாடு முழுவதும் இன்று, கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்படி யாழ்ப்பாணம், பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபை அலுவலகத்திற்கு முன்னாலும் அந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டணியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.