இலங்கையின் கடன் மதிப்பீடுகளை சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் தரமிறக்கம் செய்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நீண்ட கால சர்வதேச நாணய கையிருப்பு தொடர்பான பிரச்சினை காரணமாகவே இவ்வாறு தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் சிஎஎ1 தரத்தில் இருந்து சிஎஎ2 க்கு தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
நிதி விடயங்களைக் கையாளும் திறனில் உள்ள நிர்வாக பலவீனங்களையே இந்த மதிப்பீடுகள் பிரதிபலிப்பதாக சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.