
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது வடக்கின் சுகாதார நிலவரங்கள் மற்றும் அங்குள்ள வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அந்த சங்கத்தினர் ஆளுநரை தெளிவுப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டாவது பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணரை நியமிக்கும் விடயம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் விசேட மருத்துவ நிபுணர்களுக்கு நிலவும் பற்றாக்குறை தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.