June 17, 2025 5:10:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாலியல் இலஞ்ச குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் கைது!

பாலியல் இலஞ்ச குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், வனாத்தவில்லுவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்று தொடர்பில் நியாயத்தை பெற்றுத் தருவதாக கூறி, குறித்த பொலிஸ் அதிகாரி பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பபட்டுள்ளது.

இதன்படி 50 வயதுடைய பொலிஸ் அதிகாரியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் பிரதேசத்திலுள்ள ஹோட்டல் அறையொன்றில் வைத்து இன்று முற்பகல் இவர், கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்