January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் வெளியுறவு அமைச்சர்- பிரிட்டன் வெளியுறவு செயலாளர் சந்திப்பு

பிரிட்டனுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், அந்நாட்டு வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரூஸைச் சந்தித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சரைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பொருளாதார ஊக்குவிப்பு, முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக லிஸ் ட்ரூஸ் குறிப்பிட்டுள்ளார்.