இலங்கையின் முதலாவது மணல் மேடு பாதை கொழும்பு போர்ட் சிட்டியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய மணல் மேடு பாதைக்கு ‘கொழும்பு டியூன்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தெடுக்கும் நோக்கில் போர்ட் சிட்டியின் 5 ஏக்கர் பரப்பில் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள 3 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசமும் மணல் மேடு பாதையில் மோட்டார் வண்டிகளைச் செலுத்தியுள்ளனர்.