July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து பேராசிரியர் நீலிகா மலவிகேவுக்கு விசேட பதவி!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மலவிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனையை முன்னெடுக்கும் 10 ஆராய்ச்சி நிபுணர்கள் உள்ளனர்.

இந்த நியமனம் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Stanford பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகின் முன்னணி விஞ்ஞானிகளின் பட்டியலில் 24 இலங்கையர்கள் உள்ளனர்.

அவர்களில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே, பேராசிரியர் மெத்திக விதானகே மற்றும் கலாநிதி அனுஷ்க யு ராஜபக்ஷ ஆகியோர் அடங்குவர்.

அத்தோடு பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் பேராதனை, வடமேல், கொழும்பு, களனி மற்றும் யாழ்ப்பாண  பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.