
விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க அரசியலமைப்பு ஏற்பாடு தேவை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
“மாற்றம் நல்லது- அனாதரவில் விவசாயி” எனும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாய சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டுவர ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சஜித் கவலை வெளியிட்டுள்ளார்.
விவசாயிகளின் உரிமைகளை அரசியலமைப்பில் உள்ளடக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.