கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள உரத்தைப் பொறுப்பேற்க முடியாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சீன தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீன தூதுவர் சீ. ஷென்ஹொனுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்பார்க்கும் தரநிலைகளில் உள்ள உரத்தை மாத்திரமே தாம் பெற்றுக்கொள்வதாகவும் பிரதமர் சீன தூதுவரிடம் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ராஜபக்ஷ சீன தூதுவரிடம் தெரிவித்த விடயங்களை விவசாய அமைச்சர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன உரத்தில் தீங்கு விளைவிக்கும் பெக்டீரியாக்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உர இறக்குமதியை இலங்கை நிறுத்தியுள்ளது.