May 22, 2025 20:41:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்புக்கான திகதியை அறிவித்தன

Electricity Power Common Image

ஊழியர்கள் நவம்பர் மாதம் 3 ஆம் திகதியில் இருந்து பணி பகிஷ்கரிப்புக்குச் செல்வதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் அமைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

கெரவலபிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் தீர்மானத்துக்கு மின்சார சபை தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று மின்சார சபை தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

மோசமான ஒப்பந்தத்தை நிராகரிக்கவில்லை என்றால், நாடு முழுவதும் மின் தடை ஏற்படும் என்று மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களின் பணி பகிஷ்கரிப்பு நாடு முழுவதும் 48 மணிநேர மின் தடையை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக தெரியவருகிறது.

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற 72 மணி நேர பணி பகிஷ்கரிப்பை ஒத்ததாக இந்த நடவடிக்கை இருக்கும் என்று தொழிற்சங்க கூட்டணியின் அமைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.