அரசாங்கத்தின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
கூட்டத்துக்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
பங்காளிக் கட்சித் தலைவர்கள் இதற்கு முன்னர் சந்திப்புக்கு நேரம் கேட்டிருந்த போதும், ஜனாதிபதி மறுத்திருந்தார்.
இந்த சந்திப்பில் யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தம் மற்றும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.