உலகில் உள்ள மிக அழகான இடங்களில் இலங்கையும் ஒன்று என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடல் மாசுபாட்டை குறைக்க உதவும் “சுத்தமான நகரங்கள், நீலப் பெருங்கடல்கள்” போன்ற சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா ஆதரிப்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக கூறியுள்ளார்.
🇱🇰 is one of the most beautiful places on 🌏 & Sri Lankans know how important natural ecosystems are to their economy & culture. I’m proud that 🇺🇸 supports efforts to protect the 🇱🇰 #environment, such as our “Clean Cities, Blue Oceans” initiative helping to reduce ocean pollution pic.twitter.com/7I5XwR9knv
— Ambassador Julie Chung (@USAmbSL) October 27, 2021
அத்தோடு, இலங்கையர்கள் தங்கள் பொருளாதாரம் மற்றும் கலாசாரத்திற்கு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகள் எவ்வளவு முக்கியம் என்பதை அறிவார்கள் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.