இலங்கையுடன் மேலும் ஐந்து சர்வதேச விமான சேவைகள், சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, சுவீடனின் எடெல்வீஸ் ஏர்லைன்ஸ், ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் ஏர்லைன்ஸ் மற்றும் பிரான்ஸின் ஏர் பிரான்ஸ் ஆகியன எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளன.
ரஷ்யாவின் ஏர்அஸூர் மற்றும் இத்தாலியின் நியோஸ் ஏர் விமான சேவைகளும் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு குறித்த சர்வதேச விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.