இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பொன்றுக்கு தயாராகுவதாக அறிவித்துள்ளன.
தாம் பணி பகிஷ்கரிப்புக்குச் செல்வதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் அமைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
கெரவலபிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் தீர்மானத்துக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
அரசாங்கத்தின் பங்களாளிக் கட்சிகளுடன் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்தே, தொழிற்சங்கங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பு நாடு முழுவதும் 48 மணிநேர மின் தடையை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக தெரியவருகிறது.
அரசாங்கம் மோசமான ஒப்பந்தத்தை நிராகரிக்கவில்லை என்றால், நாடு முழுவதும் மின் தடை ஏற்படும் என்று மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.