
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐநா 76 ஆவது அமர்வின் தலைவரால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி மாநாட்டில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு அபிவிருத்தி அடைந்த நாடுகள், வளர்முக நாடுகளுக்கு உதவ வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
மனித தேவைகளுடன் சுற்றுச்சூழல் வரையறைகளை சமப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இலங்கை முழுமையாகப் புரிந்து வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் உலக மக்கள் பயங்கரமான கட்டத்தை அடைந்துள்ளதாகவும் பருவநிலை மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் மாநாட்டில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
‘புதிய கார்பன் இல்லை’ எனும் உலகளாவிய எரிசக்தி ஒப்பந்தம் மற்றும் உலகளாவிய தூய எரிசக்தி நிலைமாற்றம் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திடுவதில் தாம் பெருமைகொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.