January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒரே நாடு ஒரே சட்டம்’: ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலணியின் உறுப்பினர்கள் விபரம் 
1. கலகொடஅத்தே ஞானசார தேரர் – (தலைவர்)
2. பேராசிரியர் தயானந்த பண்டா
3. பேராசிரியர் ஷாந்திநந்தன விஜேசிங்க
4. பேராசிரியர் சுமேத சிறிவர்தன
5. என்.பி. சுஜீவ பண்டிரத்ன
6. சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன
7. சட்டத்தரணி சஞ்சய மாரம்பே
8. எரந்த நவரத்ன
9. பானி வேவல
10. மொஹமட் மௌலவி
11. விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப்
12. கலீல் ரஹ்மான்
13. அசீஸ் நிசார்தீன்

வர்த்தமானி அறிவித்தலை இந்த இணைப்பில் பார்வையிடலாம்.