
இரத்தினபுரி – கிரியெல்ல வீதியில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.
இன்று (26) காலை இரத்தினபுரி – கிரியெல்ல வீதியில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரே இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளார்.
அண்மையில் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக பதவி உயர்வு பெற்ற இவர், தற்போது பொலிஸ் மருத்துவ சேவை, நலன்புரி மற்றும் களப்படை தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.