May 13, 2025 12:26:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் ஜனாதிபதி, பிரதமரைச் சந்தித்தார் கோடீஸ்வர வர்த்தகர் அதானி

அதானி வர்த்தக குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இலங்கையின் ஜனாதிபதி, பிரதமரைச் சந்தித்துள்ளார்.

இதுதொடர்பான தகவலை கௌதம் அதானி, அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதானி நிறுவனம் இலங்கையின் துறைமுக அதிகார சபையுடன் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு சில வாரங்களாகும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அதானி நிறுவனம் இலங்கையில் வேறு பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.