சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இன்று முதல் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க துணைவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் மொத்த மாணவர்களில் 25 வீதமான மாணவர்களை மாத்திரமே ஒரே தடவையில் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் கலந்து கொள்ள சுகாதார அதிகாரிகள் அனுமதித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முழுமையாக கொவிட் தடுப்பூசிகளை பெற்று 14 நாட்கள் கடந்த மாணவர்களுக்கு இவ்வாறு பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே பல்கலைக்கழகங்கள் மற்றும் விடுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.