அகுனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று சந்தித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் சுக துக்கங்களை விசாரிப்பதற்காக தான் சிறைச்சாலைக்குச் சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சன் விரைவில் விடுதலையாக வேண்டும் என்பதே சகலரினதும் வேண்டுதல் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் இல்லாதது பெரும் குறை என்றும் அவர் மோசடி, ஊழல் மற்றும் இலஞ்சத்திற்கு எதிராக முன்னணியில் இருந்து செயற்பட்டதாகவும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஞ்சனின் மனிதாபிமான மற்றும் சுகாதார பிரச்சினைகள் குறித்த நீதி அமைச்சர் தலையிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு தாம் ஜனாதிபதியிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், குறித்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி துரிதமான தீர்மானத்தை எடுப்பார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.