கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
கெரவலபிட்டிய யுகதனவி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஜேவிபியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹன்துநெத்தி மற்றும் மத்திய குழு உறுப்பினர் வசன்த சமரசிங்க ஆகியோர் மனுதாரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த ஒப்பந்தம் மூலம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.