File Photo
கடன் சுமையால் அதிக அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ள நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் கடன் மானியக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடன் இணக்க சபையானது கடன் சுமையால் அதிக அழுத்தங்களுக்கு ஆளாகிய நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் பணிகளை மிகவும் பயனுள்ள வகையில் மேற்கொள்வதற்கு இயலுமான வகையில், கடன் மானியக் கட்டளைச் சட்டத்தை சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்காக, நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள கடன் மானியச் சட்டம் திருத்தம் செய்வதற்கான ஆலோசனைக் குழுவால் அடிப்படை சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த அடிப்படை சட்டமூலத்திற்கமைய, கடன் மானிய கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கும். அதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும். நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.