சம்பள முரண்பாட்டுப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டங்களை தொடர்வதற்கு அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கு கற்பித்தல் செயற்பாடுகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டாலும், வேறு கடமைகளில் ஈடுபடாது புதிய வடிவில் தமது தொழிற்சங்கப் போராட்டத்தை தொடரவுள்ளதாக அதிபர், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இது தொடர்பான அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் தீர்மானங்கள் வருமாறு,
- நிகழ்நிலைக் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளாதிருத்தல்.
- சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் உத்தியோகபூர்வ கடமைகளை செய்யாதிருத்தல்.
- சுகாதார நலன்பேண் விடயங்களை செய்யாதிருத்தல்.
- மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுத்தரும் செயற்பாடுகளை மேற்கொள்ளாதிருத்தல்.
- திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகளை தவிர்த்தல்.
- கூட்டங்களை ஏற்பாடு செய்தல், கலந்து கொள்வதை தவிர்த்தல்.
- மதியம் 1.30 பின்னர் ஆசிரியர் கலந்துரையாடல், அதிபர் கூட்டங்கள், வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதிருத்தல்.
- மதியம் 1.30 பின்னர் கற்றல் தொடர்புடைய வெளிவாரியான செயற்பாடுகளை தவிர்த்தல்.
- பாடசாலைக்கு வெளியே போட்டிகள், பயிற்சிகள், கருத்தரங்குகள், கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்தல்.
- 1.30 பின்னர் கருத்தரங்குகளில் பங்கு பற்றுவதை தவிர்த்தல்.
- பாடசாலையில் விழாக்கள் ஏற்பாடு செய்வதை தவிர்த்தல்.
- வலய, கோட்ட கல்வி காரியாலயத்திற்கு தகவல் வழங்குவதை தவிர்த்தல்.
தர நிலை 8இன் படி கடமை செய்யாதிருத்தல். - வருடாந்த, ஐந்தாண்டு திட்டங்களை தவிர்த்தல்.
- பொருட்கள் கணக்கெடுப்பு, கணக்காய்வு செய்வதை தவிர்த்தல்.
- பாடசாலை முடிந்த பின் கடமை செய்வதை தவிர்த்தல்.
- பாடசாலை அபிவிருத்தி சங்க கூட்டங்களை தவிர்த்தல்.
- அரச கடமைக்கு தனிப்பட்ட சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தல்.
அதிபர் ஆசிரியர்கள் கடமைகள்
- வரவு புத்தகத்தில் கையொப்பமிடல்.
- நேர அட்டவணைக்கேற்ப கற்பித்தல்.
- வரவு இடாப்பு, பாடப்புத்தகம் தொடர்புடைய வேலைகளை செய்தல்.
- மாணவருடன் தொடர்புடைய ஒழுக்கம், உளவியல் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.