May 29, 2025 5:00:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமந்திரனுக்கு எதிராக குருநகரில் மீனவர்கள் போராட்டம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக யாழ். மாவட்டத்தின் குருநகர் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

உள்ளூர் இழுவை மடி மீன்பிடி தொழில் முறை தடை செய்யப்பட வேண்டும் சுமந்திரன் தெரிவித்துள்ளதாக கூறப்படும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வல்வெட்டித்துறை மீனவர்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர்.

இதேவேளை அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மையையும் எரித்தனர்.