File Photo
கொழும்பு மாவட்டத்தின் அங்கொடை – முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் 42 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.