
கனேடிய தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.
கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் திட்ட மேம்பாடு குறித்து ஆராய்வதற்காகவே, அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.
தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொம் ப்றவ்ணல் தலைமையில் அதிகாரிகள் குழு பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தது.
இவர்களுடன் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். விஜயலட்சுமி, திட்ட ஆலோசகர் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இந்தக் குழுவினர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி கலாநிதி கே. சுதாகர், மொழிபெயர்ப்புகள் கற்றல் துறையின் தலைவர் எஸ். கண்ணதாஸ் ஆகியோரை சந்தித்து திட்ட மேம்பாடு குறித்து கலந்துரையாடினர்.